sri ganesh direction atharvaa starring 'kuruthi aattam' movie release date announced

கடந்த 2017ஆம் ஆண்டு ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அதர்வாவை வைத்து 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்தது. பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை.

Advertisment

இந்நிலையில் 'குருதி ஆட்டம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அதர்வா உள்பட படக்குழுவினர் அனைவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்கள். இப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment