“ஒரு மணி நேரம் அழுதுகொண்டே இருந்தேன்” - ஸ்ரீ திவ்யா 

sri divya emotional speech in meiyazhagan pre release event

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 8ஆம் தேதி கோவையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கார்த்தி, அர்விந்த் சுவாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ திவ்யா பேசுகையில், “எனக்கு மெய்யழகன் ரொம்ப ஸ்பெஷலான படம். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் 96 படத்தில் பிரேம் ஒரு மேஜிக் பண்ணியிருப்பார். அதேபோல் இந்த படமும் என்ன பண்ண போகிறது என்பதற்காக காத்திருக்கிறேன். எனக்கு நீண்டநாள் கழித்து இந்த படத்தின் ஆல்பம் மிகவும் பிடித்திருந்தது. அந்தளவிற்கு ஆத்மார்த்தமாக இருந்தது. இப்படத்தில் கமல்ஹாசன் பாடிய ‘யாரோ இவன் யாரோ...’ என்ற பாடல் வேற லெவலில் இருந்தது. அந்த பாடலை கேட்டு ஒரு மணி நேரம் அழுதுகொண்டே இருந்தேன்.

‘அருள் மெய்...’ என்ற பாடலை கேட்கும்போது என்னை அறியாமையிலேயே சின்ன வயது மற்றும் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. அம்மா கொடுத்த அந்த சுத்தமான அன்பை இப்போது வரை நான் அனுபவித்ததே கிடையாது. இன்னும் அந்த மாதிரி அன்பை தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். அந்தளவிற்கு ‘அருள் மெய்...’ பாடல் என் மனதை தொட்டது. இந்த படத்தில் ஒரு பகுதியாக நானும் இருப்பது மிகவும் சந்தோஷம்” என்றார்.

actor karthi
இதையும் படியுங்கள்
Subscribe