Advertisment

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட நடிகர் கைது

sreenath bhasi arrested

Advertisment

மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீநாத் பாஸி. கடந்த பிப்ரவரியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பரிட்சியமானார்.

இதனிடையே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். 2022ஆம் ஆண்டு யூட்யூப் சேனல் தொகுப்பாளினியிடம் தவறாக நடந்து கொண்டதாக இவர் மீது கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்பு கடந்த ஆண்டு இவர் படப்பிடிப்பு தளத்திற்கு போதையில் வருவதாக புகார் எழுந்தது. சமீபத்தில் கூட ரவுடி கும்பல் தலைவரான ஓம்பிரகாஷிடம் போதைப் பொருள் சம்பந்தமாகப் பேசியதாக காவல் துறை வெளியிட்ட ரிமாண்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் இவர் கார் விபத்து ஏற்படுத்தி சிக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் மட்டாஞ்சேரி பகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்துகொண்டிருந்த, முகமது பஹீம் என்பவர் மீது அவரது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் முகமது பஹீமுக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பின்பு ஸ்ரீநாத் பாஸியை அவர்கள் கைது செய்துள்ளனர். பின்னர் காவல் நிலைய ஜாமீனில் அவரை விடுவித்தனர்.

actor Kerala mollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe