/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/415_10.jpg)
இயக்குநர் சுதா கொங்கரா கடைசியாக அக்ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து மீண்டும் சூர்யவை வைத்து புறநானுறு என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவிருந்தார். இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் கமிட்டாகியிருந்தனர். இசைப் பணிகளை ஜி.வி. பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்திற்காக பாடகி தீ-யை வைத்து ஒரு பாடலையும் பதிவு செய்தார்.
ஆனால் இப்படத்தில் சூர்யா விலகியதாகவும் அதற்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதோடு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவிருந்து தற்போது புதிய நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/416_9.jpg)
இந்த நிலையில் இப்படத்தின்கதாநாயகிகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாஇப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகநடிக்கவுள்ளதாககூறப்படுகிறது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் ஸ்ரீலீலாவுக்குமுதல்தமிழ்படமாக இப்படம் அமையும். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதமிழ்படம் ஒன்றில்கமிட்டாகியுள்ளதாகதெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)