/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/171_24.jpg)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ, அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இப்படத்திலும் ஒரு குத்துப் பாட்டு இருப்பதாகவும் அதில் மலைக்கா அரோரா, திஷா பதானி மற்றும் மீண்டும் சமந்தாவே நடனமாட இருப்பதாக முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா நடனமாட இருப்பதாகலேட்டஸ்ட் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபடுவதால் விரைவில் படக்குழு யார் என்பதை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)