Advertisment

புஷ்பா 2-வில் இணைந்த ஸ்ரீலீலா 

sree leela joins in pushpa 2

புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Advertisment

முதல் பாகத்தில் இடம்பெற்ற ஊ அண்டாவா' பாடல் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்து பாடல் இருக்கிறது. இந்தப் பாடலுக்கு மலைக்கா அரோரா, திஷா பதானி மற்றும் மீண்டும் சமந்தாவே நடனமாட இருப்பதாக முன்பு தகவல் வெளியானது. பின்பு தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீ லீலா நடனமாட இருப்பதாக சொல்லப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஸ்ரீலீலா நடனமாடியுள்ளதாக அதிகாரப்புர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா கோரியோகிராஃப் செய்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 5, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Sreeleela
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe