Advertisment

“அரசாங்கம் பிதுங்கிக் கொண்டிருக்கிறது”- எஸ்.ஆர். பிரபு

sr prabhu

Advertisment

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்களில் மக்கள் கூடுவதைத்தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமாத்துறையும் முடங்கியுள்ளது. அதனால் அத்துறையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் நடைபெறுகிறது. அதேபோல சினிமாத்துறையில் குறைந்த ஆட்களைக் கொண்டு பணிபுரியும் போஸ்ட் தயாரிப்பு பணிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று ஃபெப்சி சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று சினிமாத்துறையைச் சேர்ந்த சங்கங்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

Advertisment

http://onelink.to/nknapp

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “கிண்டலுக்கும் அப்பாவி குடிமகன்களுக்கும் இடையே அரசாங்கம் பிதுங்கிக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றிலும் சோகக் கதையையோ, நகைச்சுவை கதையையோ பார்க்கிறேன். இந்த வைரஸை எதிர்க்கக் கூட்டு முயற்சியே தேவை. ஊரடங்கு பசிக்கு வழிவகுக்கும். அதைத் தளர்த்துவது தொற்றைப் பரவலாக்கும். இந்தத் தீயில் ஓடிக்கொண்டிருக்கும் என்எச்எஸ் மற்றும் காவலர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

sr prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe