Advertisment

விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...

அட்லி, விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இந்த படம் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

sr prabhu

சுமார் ரூ.150 கோடிக்கு மேல் செலவு செய்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் இந்த படம் மட்டும்தான் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், எந்த தேதியில் ரிலீஸ் என்பதை அறிவிக்கவில்லை.

Advertisment

இந்நிலையில் எஸ்.ஆர்.பிரபு சார்பில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள கைதி படமும் அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் கைதி படத்தின் ரிலீஸ் தேதிதான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரண்டு படங்களுக்கு ரிலீஸுக்கு தயாரகி, முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் பிகில் மற்றும் கைதி குறித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த எஸ்.ஆர்.பிரபு இரண்டு படங்களுமே தீபாவளிக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்றார்.

கைதி பட தயாரிப்பாளரின் இந்த பதிவைப் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் விஜய்யை வெறுக்கிறீர்கள். உங்களது தயாரிப்பில் வெளியாகும் படங்களைப் பார்க்கிறேன். ஏன் விஜய் பெயரை டேமேஜ் செய்கிறீர்கள் என்றார். மேலும் ஒரு விஜய் ரசிகர் கைதி படக்குழு செய்வது சரியில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ரசிகர்கள் சண்டை போடுவதற்காக விமர்சிப்பதற்கான வாய்ப்புகளை அவர்களே தேடிக்கொள்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முடியாது. எல்லா படங்களும் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். முகமில்லாத முட்டாள்தனமான குணாதிசயங்களுடன், அசிங்கமான பதிவுகளின் மூலம் மாற்றத்தை கொண்டுவரலாம் என்று நினைப்பவர்களுக்கு நான் எதுவும் சொல்வதற்கில்லை” என்று கூறியுள்ளார்.

actor vijay sr prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe