இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் 4 திரைப்படங்கள்

sr prabhu produces 4 new movie

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது.

கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) உட்பட மேலும் இரண்டு பெயரிடப்படாத திரைப்படங்களை இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

இது குறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர். பிரபு பேசுகையில், "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்றார்.

sr prabhu
இதையும் படியுங்கள்
Subscribe