Advertisment

சூர்யா 45, கைதி 2... - வெளியான தொடர் அப்டேட்டுகள்

sr prabhu about suriya 45 kaithi 2 updates

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுனங்களில் ஒன்றாக இருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், கைவசம் சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி படம், கார்த்தியின் கைதி 2 மற்றும் கார்த்தி - டாணாக்காரன் தமிழ் கூட்டணி படம் ஆகியவற்றை வைத்துள்ளார்கள்.

Advertisment

இப்படங்களில் அப்டேட்ஸுகளை அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அவர் பேசியதாவது, “சூர்யா 45 பட படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிய இருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. ரிலீஸ் சரியான நேரத்தில் வரும். படத்தை பற்றிய ஜூன் மாத இடையில் இருந்து வர ஆரம்பிக்கும். இந்த படம் ஒரு முழுமையான கொண்டாட்டம் நிறைந்த படம். அதனால் பண்டிகை நாளில் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம்”

Advertisment

கைதி2 குறித்து பேசிய அவர், “ஒரு மாதத்துக்கு முன்னாடியே பட வேலைகளை ஆரம்பித்து விட்டோம். இந்த ஆண்டு கடைசியில் அடுத்தகட்டத்துக்கு நகரும்” என்றார். பின்பு அடுத்தடுத்து தங்களது நிறுவன படங்கள் குறித்து பேசிய அவர், “அடுத்து டாணாக்காரன் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் உருவாகிறது. அதனுடைய படப்பிடிப்பிற்கு முந்தைய வேலைகள் ஆரம்பித்துவிட்டோம். அடுத்த மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அது முடிந்தவுடன் உடனடியாக கைது 2 ஆரம்பிக்கும்” என்றார்.

sr prabhu kaithi 2 Suriya 45
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe