Advertisment

சோனு சூட்டை வித்தியாசமான முறையில் கௌரவித்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!

sonu sood

நடிகர் சோனு சூட், கரோனா கால ஊரடங்கின் போது வெளிநாடுகளில் சிக்கித் தவித்தவர்கள் இந்தியா திரும்ப உதவியது, வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கியது, ஒரு கிராமத்தில் மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தது உள்ளிட்ட பல உதவிகளைச் செய்து வந்தார். கரோனா நெருக்கடி நிலை தளர்ந்து இயல்பு நிலை திரும்பி வரும் தற்சமயத்திலும், உதவி கோருபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்து வருகிறார்.

Advertisment

நடிகர் சோனு சூட்டின் இச்செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருவதோடு, பலரும் சோனு சூட்டை கௌரவப்படுத்தி வருகின்றனர். ஆந்திராவில் உள்ள ஒர் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனம், சோனு சூட்டை கௌரவிக்கும் விதமாகத் தங்களது பயிற்சி மையத்தின் கலை மற்றும் மனித நேயத்துறைக்கு அவரது பெயரைச் சூட்டியது. மேலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துப்பதண்டா என்ற கிராம மக்கள் சோனு சூட்டிற்கு கோயில் கட்டியுள்ளனர். அந்த வகையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தங்களது ஒரு விமானத்தில் சோனு சூட்டின் உருவப்படத்தைப் பதித்து சோனு சூட்டை வித்தியாசமான முறையில் கௌரவப்படுத்தியுள்ளது.

Advertisment

இதனையடுத்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சோனு சூட்டின் படம் பதித்த விமானத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

sonu sood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe