தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

special shows granted for dhanush raayan

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தற்போது தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் வரும் ஜூலை 26ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது. கானா காதர் எழுதியுள்ள இப்பாடல் கானா ஸ்டைலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனால் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. இப்படம் வெற்றி பெற வேண்டி தேனியில் உள்ள குலதெய்வ கோயிலில் தனது குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு செய்தார். இந்த நிலையில் இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் வழங்கியுள்ளது தமிழக அரசு. படம் வெளியாகும் முதல் நாளான 26ஆம் தேதி 5 காட்சிகள் வீதம் காலை 9 மணிக்கு தொடங்கி மறுநாள், அதிகாலை 2 மணி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

actor dhanush Raayan theatre tn govt
இதையும் படியுங்கள்
Subscribe