Advertisment

ஆர்யன் கானிடம் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

special court order aryan khan should return the passport to Khan

கடந்த வருடம் அக்டோபர் 2ம் தேதி மும்பையிலிருந்து கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் பலமுறை நீதிமன்றத்தை நாடிய நிலையில் கைது செய்யப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. மேலும், இந்த வழக்கில் ஆரியன் கானுடன் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இறுதியாக ஆர்யன் கான் போதைமருந்து பயன்படுத்தவில்லை என்று கூறி இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே ஆர்யன் கான் இவ்வழக்கில் சிக்கிய நேரத்தில் அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் ஆர்யன் கான் தனது பாஸ்போர்ட்டை வழங்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை அவரிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Aryan Khan Drugs sharukh khan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe