கரோனாவுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கரோனா ஊரடங்கில் தொடர்ச்சியாகப் பணிபுரிவோருக்கு நன்றி தெரிவித்து வைரமுத்து ஒரு பாடலை எழுத, அதுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.அந்தப் பாடல் வருமாறு...

gdg

''உழைக்கும் கடவுள்களே

உங்களுக்கெல்லாம் நன்றி!

அழைக்கும் வேளையிலே – எங்கள்

ஆரூயிர் காப்பீரே – உங்கள்

அத்தனை பேர்க்கும் நன்றி!

இதயத்திலிருந்து

சொற்கள் எடுத்து

எடுத்த சொற்களைத்

தேனில் நனைத்து...

வாரி வழங்குகின்றோம் – உம்மை

வணங்கி மகிழுகின்றோம்!

மண்ணுயிர் காக்கத் தன்னுயிர் மறக்கும்

மானுடக் கடவுள் மருத்துவர்கள்!

தேவை அறிந்து சேவை புரியும்

தேவதை மார்கள் செவிலியர்கள்!

பயிரைக் காக்கும் வேர்கள் போல

உயிரைக் காக்கும் ஊழியர்கள்!

http://onelink.to/nknapp

வெயிலைத் தாங்கும் விருட்சம் போல

வீதியில் நிற்கும் காவலர்கள்!

தூய்மைப் பணியில் வேர்வை வழியத்

தொண்டு நடத்தும் ஏவலர்கள்!

வணக்கமய்யா வணக்கம் – எங்கள்

வாழ்க்கை உங்களால் நடக்கும் – உங்கள்

தேசத் தொண்டை வாழ்த்திக் கொண்டே

தேசியக் கொடியும் பறக்கும்!''

என்று பாடியுள்ளார்.

sp balasubramanian spb
இதையும் படியுங்கள்
Subscribe