Skip to main content

கரோனாவுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கரோனா ஊரடங்கில் தொடர்ச்சியாகப் பணிபுரிவோருக்கு நன்றி தெரிவித்து வைரமுத்து ஒரு பாடலை எழுத, அதுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அந்தப் பாடல் வருமாறு...

 

 

 

 

 

gdg

 

''உழைக்கும் கடவுள்களே
உங்களுக்கெல்லாம் நன்றி!
அழைக்கும் வேளையிலே – எங்கள்
ஆரூயிர் காப்பீரே – உங்கள்
அத்தனை பேர்க்கும் நன்றி!

 

இதயத்திலிருந்து
சொற்கள் எடுத்து
எடுத்த சொற்களைத்
தேனில் நனைத்து...
வாரி வழங்குகின்றோம் – உம்மை
வணங்கி மகிழுகின்றோம்!

 

மண்ணுயிர் காக்கத் தன்னுயிர் மறக்கும்
மானுடக் கடவுள் மருத்துவர்கள்!

 

தேவை அறிந்து சேவை புரியும்
தேவதை மார்கள் செவிலியர்கள்!
பயிரைக் காக்கும் வேர்கள் போல
உயிரைக் காக்கும் ஊழியர்கள்!

 

http://onelink.to/nknapp

 

 

 

வெயிலைத் தாங்கும் விருட்சம் போல
வீதியில் நிற்கும் காவலர்கள்!

 

தூய்மைப் பணியில் வேர்வை வழியத்
தொண்டு நடத்தும் ஏவலர்கள்!

 

வணக்கமய்யா வணக்கம் – எங்கள்
வாழ்க்கை உங்களால் நடக்கும் – உங்கள்
தேசத் தொண்டை வாழ்த்திக் கொண்டே
தேசியக் கொடியும் பறக்கும்!''                         


என்று பாடியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாத பாட்டு எது?’ - கவிஞர் வைரமுத்து ருசிகரம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மேடையில் பேசிய அவர், ''பரத்வாஜ் கிளப் டான்ஸ் மாதிரி ஒரு பாட்டு கொடுங்க சார் என்றார். சும்மா வாய்மொழியாக சொன்னது 'சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்' இதெல்லாம் சரியா இருக்குமா என்று கேட்டேன். நல்லா இருக்கும் சார் என்று இசையமைத்து காண்பித்தார். எல்லாத்தையும் விட முக்கியமானது இந்திய சினிமா தோன்றி அதிகமான வரிகளால் பாடப்பட்ட பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'. செஞ்சி மலை மீது அஜித் குமார் பாடிய பாட்டு; சரண் இயக்கிய பாட்டு; நான் எழுதிய பாட்டு 89 வரிகள் கொண்ட பாட்டு; எஸ்.பி.பி பாடிய பாட்டு.

 

எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாது என்று நீங்கள் கருதுகின்ற பாட்டு எது என்று ஒரு தொலைக்காட்சி ட்விட்டரில் ஒரு விளம்பரம் கொடுத்தது இன்றைக்கு. நான் ஆச்சரியமாக புரட்டி பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருக்கிற முதல் பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ அடுத்து 'சங்கீத ஜாதி முல்லை' அடுத்து 'அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி' அடுத்து 'என் காதலே என் காதலே' நான்கும் என் பாட்டு. இது ஆச்சரியமாக இருந்தது. அதில் முக்கியமான பாட்டு 89 வரிகள் கொண்ட 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டு. திரும்ப தமிழில் இப்படி ஒரு பாட்டு வரவே முடியாது. அந்தப் பாட்டுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ்'' என்றார்.

 

 

Next Story

100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர்!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

PV SINDHU KANGANA RANAUT

 

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை வழங்கும் விழா, டெல்லியில் இன்று (08.11.2021) நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

 

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பாடகி சித்ரா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் நட்சத்திரம் பி.வி. சிந்துவிற்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா, இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், நடிகை கங்கனா ரணாவத், சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்பாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் 119 பத்ம விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.