கைப்பட எழுதிய எஸ்.பி.பி! 

sign

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா தொற்று, பலரையும் பாதித்து வருகிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன் வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கையில், “தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலை தேறிவருவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. நானும் எனது சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளைக் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறியுள்ளார்.

எஸ்.பி.பி உடல்நிலை முன்னேறிய நிலையில், பேனா மூலம் சில வி‌ஷயங்களை சொல்ல வருகிறார். இதற்காக அவரிடம் பேனா, பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘லவ் யூ ஆல்’ என்று எஸ்.பி.பி எழுதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் எழுதியதும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மருத்துவர்கள், நர்சுகள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள் என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe