Advertisment

“கடவுளுக்கு மனசாட்சி உண்டு...”- எஸ்.பி.பி சரண் உருக்கம்!

spb

Advertisment

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் சரண் தினசரி வீடியோ பதிவின் மூலம் தெரிவித்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அப்பாவின் உடல்நிலையில் மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே உங்களிடம் கூற புதிதாக எதுவும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்ததைப் போல, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அப்பாவுக்காக, எங்கள் குடும்பத்துக்காகச் செய்யப்படும் அத்தனை பிரார்த்தனைகளும் கண்டிப்பாக அவர் விரைவில் குணமடைய உதவும் என நம்புகிறோம்.

தேசத்திலிருக்கும் திரைத்துறை, இசைத்துறையினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு ஒன்று சேர்ந்து, அப்பாவுக்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த அன்புக்கு, எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம்.

Advertisment

உலகம் முழுவதிலும், எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். என் அப்பாவின் நலனுக்காக இந்தக் கூட்டுப் பிரார்த்தனையை முன்னெடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி.

நன்றி சொல்ல வார்த்தையில்லை. தலை வணங்குகிறோம். இந்தப் பிரார்த்தனைகள் எதுவும் வீண் போகாது. கடவுளுக்கு மனசாட்சி உண்டு. அவர் கண்டிப்பாக அப்பாவை நமக்காக மீட்டுத் தருவார். அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றி. நீங்கள் செய்யும் இந்தக் கூட்டுப் பிரார்த்தனையால் என் குடும்பம் இன்று தைரியமாக உணர்கிறது. மீண்டும் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

sp balasubramanian
இதையும் படியுங்கள்
Subscribe