Skip to main content

"அப்பா இன்றும் அப்படியேதான் இருக்கிறார்" - எஸ்.பி.பி சரண் 

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
vnvj

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென பாடகர் எஸ்.பி.பி. கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். மேலும் எஸ்.பி.பி.யின் உடல் நலம் குறித்து தினமும் வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் எஸ்.பி.பி. உடல்நல முன்னேற்றம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்...

 

"அப்பா நேற்று எந்த நிலையில் இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சையில் இருந்தாலும் சீராக இருக்கிறார். வேறெந்த சிக்கல்களும் இல்லை. இது நல்ல அறிகுறி என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். பிரார்த்தனைகள், வாழ்த்துகள், அக்கறை, அன்பு செலுத்தும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூற விரும்புகிறேன். கண்டிப்பாக அப்பா மீண்டு வருவார், நன்றி" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்