/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitlednew.jpg)
பிரபல பாடகர் எஸ்.பி.பி. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது உடல்நலன் சரியாக வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இதனிடையே தினசரி எஸ்.பி.பி உடல்நலன் குறித்து அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28) எஸ்.பி.பி உடல் நலம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சரண், அதில்...
"நேற்று சொன்னதுபோல் இன்றும் சுருக்கமாக சொல்கிறேன். அப்பா நல் ஆரோக்கியத்தை நோக்கி மெதுவாக முன்னேறி வருகிறார். கடந்த இரண்டு நாட்களைவிட நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளது. எனவே அனைத்தும் நல்ல அறிகுறிகளே. மருத்துவர்களும் நம்பிக்கையாக இருக்கிறார்கள். மீண்டும் அப்பாவுக்காக உங்கள் பிரார்த்தனைகள், அக்கறை, அன்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சிறிய வேண்டுகோள், உங்கள் பிரார்த்தனைகளைத் தொடருங்கள். நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)