/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled_100.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் நேற்று அவர் மீண்டும் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்...
"அப்பா நிலையாக இருக்கிறார் என்ற வார்த்தையை மருத்துவமனை இன்று பயன்படுத்தியுள்ளது. நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் குழு கூறியிருந்தது. மருத்துவமனையின் இன்றைய அறிக்கை அவர் நிலையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கவலைக்கிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. ஆனாலும் இதற்கு அவர் முழுமையாக குணமாகிவிட்டார் என்று அர்த்தமல்ல. இதற்கு அர்த்தம், அவர் உடல்நிலையில் இப்போதைக்கு சிக்கல்கள் இல்லை, உடலின் அடிப்படை செயல்பாடுகள் ஒழுங்காக உள்ளன. முன்னரே நாங்கள் குறிப்பிட்டதுபோல மருத்துவக் குழு மீதும், எங்களுக்காக வரும் பிரார்த்தனைகள் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் நிலையாக இருக்கிறார் என்று இன்று சொல்லப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி. அப்பாவுக்காகவும், குடும்பத்துக்காகவும் பிரார்த்தனைகள், அன்பு, அக்கறை காட்டும் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன். மீண்டு வரும் நீண்ட பயணம் உள்ளது, ஆனால் கண்டிப்பாக மீண்டு வரும் பயணம். அனைவருக்கும் மீண்டும் நன்றி" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)