/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled_105.jpg)
பிரபல பாடகர் எஸ்.பி.பி. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் மக்கள் அவரது உடல்நலன் சரியாக வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இதனிடையே தினசரி எஸ்.பி.பி. உடல்நலன் குறித்து அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், நேற்று (ஆகஸ்ட் 27) எஸ்.பி.பி உடல் நலம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சரண், அதில்...
"இன்று மிகவும் இனிமையான நாள். அப்பா தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார். தேறி வருகிறார். இது ஒரு நல்ல அறிகுறியே. இன்று அப்பாவுக்கு பிசியோதெரபி சிகிச்சையும் செய்திருக்கிறார்கள். நான் இன்று அப்பாவைச் சென்று பார்க்கவில்லை. மீண்டும் எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், அப்பாவுக்காக அன்பு, அக்கறை மற்றும் பிரார்த்தனை செய்துவரும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். விரைவில் பல நல்ல செய்திகள் வரும் என நம்புகிறேன். எந்தத் தகவலும் இல்லை என்றாலே நல்ல விஷயம்தான் என்றார்கள். எனவே அப்பா ஆரோக்கியத்துடன், குணமாகிக் கொண்டு வருகிறார். நன்றி" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)