spb charan

பிரபல பாடகர் எஸ்.பி.பி கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. அதனைத் தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் மக்கள் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.

Advertisment

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவரது மகன் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்தார். கடைசியாக வெளியிட்ட வீடியோவில், திங்களன்று நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று வெளியிட்ட வீடியோவில் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஐ-பேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருவதாகவும், பேச நினைப்பதை எழுதி காண்பிப்பதாகவும் மகன் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி-யின் நுரையீரலில் தொற்று குணமடைந்துவருகிறது, பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.