கரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த நோயின் தீவிரமும் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

spb

இந்நிலையில் பலரும் இந்த நோயினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தடுப்பதற்காக நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.ஒருசிலர் தங்களின் அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி உதவிகள் செய்கின்றனர்.

இந்நிலையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய அறக்கட்டளைச் சார்பாக நிதி திரட்ட தொடங்கியுள்ளார்.ரூ.100 க்கு மேல் யார் வேண்டுமானாலும் நிதி தரலாம் என்று எஸ்.பி.பி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.மேலும் நிதி கொடுத்தவர்கள் எஸ்.பி.பி. பாடிய பாடல்களில் எதேனும் ஒன்றை பாடச் சொல்லி கேட்டால் அதை அவர் பாடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதன் மூலம் எஸ்.பி.பி அறக்கட்டளைக்கு சுமார் 4.75 லட்சம் நிதி திரட்டியுள்ளார். முன்னதாக கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடல்களைப் பாடியிருந்தார் எஸ்.பி.பி.