/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva_83.jpg)
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர்சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, நயன்தாரா, ஜெகபதி பாபு எனபலரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இத்திரைப்படம், தீபாவளி தினத்தன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா குடும்பத்துடன் 'அண்ணாத்த' படத்தைப் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து, படம் குறித்த தனது கருத்தை ஹூட் ஆப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "நான் படம் பார்த்துவிட்டு இயக்குநர் சிவா சார் கையைப் பிடித்துகண்ணீருடன் நன்றி சொன்னேன். நீங்கள் 'அண்ணாத்த' படத்தில் பண்ணியிருப்பது மேஜிக் இல்ல சார், அதை சொல்வதற்கு வார்த்தைஇல்லை. தலைவருடைய ரசிகையாகவும், ரஜினிகாந்த் மகளாகவும் சொல்கிறேன், நீங்கள் அப்பா கூட இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)