Skip to main content

நீச்சல் குளப் புகைப்படத்தை நீக்கிவிட்டு விளக்கமளித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்...

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா சமீபத்தில்தான் விஷாகன் என்ற நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர் தன்னுடைய சுற்றுலா படங்களை ட்ராவல் டைரி என்ற தலைப்பில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவ்வரிசையில் தன் மகன் வேத் உடன் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி கொடுக்கும் புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
 

sowndarya

 

 

இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் விமர்சனம் எழுந்தன. தமிழகமே தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனை ஆபத்தான நிலையில் இருக்கிறது இந்த சமயத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பதுபோல புகைப்படம் தேவைதானா. இவ்வளவு தண்ணீரை வீணடிக்கிறீர்களே என்று பலரும் விரக்தியில் அவருக்கு கமெண்ட் செய்து வந்தனர்.
 

பின்னர், மக்களின் கருத்துக்களை உணர்ந்த சவுந்தர்யா அந்த படத்தை உடனடியாக ட்விட்டரிலிருந்து டெலிட் செய்தார். அதனை அடுத்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், “தண்ணீர் பற்றாக்குறையால் என்னை சுற்றிலும் உள்ளவர்கள் அவதிப்படும் நேரத்தில் அந்த படம் வேண்டாம் என்று நீக்கி விட்டேன். மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதால் அவனுக்கு அளிக்கும் பயிற்சியை பகிரும் நோக்கத்தில் தான் அந்த படத்தை வெளியிட்டேன்”. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் பற்றாக்குறை; மாணவர்களுக்காக மறியலை கைவிட்ட பெண்கள்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

kallakurichi vadakananthal water scarcity incident cancel due to public exam 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கநந்தல் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு சில மாதங்களாக குடிதண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் போர்வெல் மூலம் போதுமான அளவுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சாலைப்பணியின் காரணமாக பைப்லைன் சேதமடைந்துள்ளது. இதனால் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

 

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நிர்வாகம் கண்டுகொள்ளாததால் அப்பகுதி பெண்கள் ஒன்று திரண்டு கச்சராப்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் செல்லும் சாலையில் அக்ராபாளையம் மாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கச்சராப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத பெண்கள் மறியலை தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வு நடைபெற்ற நிலையில் அப்பகுதியில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் பேருந்தில் சென்று தேர்வு எழுதுவதற்கு அரசு பேருந்துகள் மூலம் புறப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இந்த சாலைமறியலில் சிக்கிக் கொண்டனர். தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சென்று இன்று அரசு பொதுத்தேர்வு எங்களுக்கு அனைவருக்கும் நடக்க உள்ளது. அதை எழுத முடியாவிட்டால் எங்கள் படிப்பு, வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, எங்கள் அனைவரையும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக எண்ணி தேர்வு எழுதச் செல்வதற்காக பேருந்து செல்ல விடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

 

சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் பள்ளிப்பேருந்து உட்பட அனைத்து வாகனங்களும் செல்ல போக்குவரத்திற்கு வழிவிட்டு கலைந்து சென்றனர். இதைக் கண்டு மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களுக்கு நன்றி தெரிவித்தனர் இதையடுத்து வடக்கநந்தல் பேரூராட்சி அலுவலர்கள் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்வதாக உறுதி அளித்தனர்.

 

இந்த சம்பவத்தால் அக்ராபாளையம் வடக்கநந்தல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

20 நாட்களாக வராத குடிநீர்; காலி குடங்களுடன் சாலைக்கு வந்த கிராமத்தினர் 

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

cuddalore vakkaramari village water scarcity incident 

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வக்கிராமாரி கிராமத்தில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும் குடிநீருக்காக பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டிமேடு மற்றும் நாஞ்சலூர் கிராம பகுதிக்குச் சென்று குடிநீர் எடுத்து வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிநீர் குழாய் உள்ள இடத்தில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு குடிசை வீடு கட்டிக்கொண்டு குடிநீர் குழாயை உடைத்துள்ளதாகவும் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, காவல் ஆய்வாளர் ஆறுமுகம், வட்டாட்சியர் செல்வகுமார், நகராட்சி பொறியாளர் மகாராஜன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசை வீட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றி உள்ளனர்.