Advertisment

விஜயகாந்த் மறைவிற்கு தென்னிந்திய பிரபலங்கள் இரங்கல்

south indian cinema celebrities about vijayakanth

Advertisment

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், “அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை” என பதிவிட்டுள்ளார்.

Advertisment

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமானரோஜா, “தமிழ் திரையுலகின் ஜாம்பவான் கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். பொன் இதயம் கொண்ட மனிதரும், அவரது தெய்வீக ஆத்மாவும் சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

actress roja vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe