Advertisment

ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!

south indian artists association trustee met rajinikanth

நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைத்து, நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மார்ச் மாதம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதன்படி நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளராக கார்த்திக்ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்துவெற்றி பெற்ற அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

Advertisment

சமீபத்தில் நாசர் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66 வது கூட்டத்தில் விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்கப்படும் எனத்தெரிவித்தனர். மேலும் இதற்காக வங்கியில் கடன் வாங்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்துள்ளனர். மேலும் இந்த சந்திப்பில் நடிகர் சங்கம் குறித்து பேசப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.

Advertisment

actor karthi Actor Rajinikanth Nassar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe