Advertisment

கமல்ஹாசனுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு

south indian artists association trustee met kamalhaasan

நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மார்ச் மாதம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதன்படி நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளராக கார்த்திக்கு ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்துகூடிய செயற்குழு கூட்டத்தில் வெற்றி பெற்ற அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். மேலும்தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலராகநடிகர் கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் நடிகர் கமல்ஹாசனைநேரில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது கமல்ஹாசனை சங்கத்தின் அறங்காவலர் உறுப்பினர் பொறுப்பைஏற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

Advertisment

actor karthi Nassar actor kamal hassan kamalhaasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe