Advertisment

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்; வாக்கு எண்ணும் தேதி அறிவிப்பு

south indian artists association election vote counting date announced

கடந்த 2019ஆம் ஆண்டு ஜுன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனிநீதிபதி கல்யாணசுந்தரம் தேர்தல் செல்லாது எனத் தீர்ப்பளித்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால், கார்த்திக், நாசர் தரப்பு மேல்முறையீடு செய்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெற்றஇவ்வழக்கில்2019ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தல் செல்லும்என்றும், அதில் பதிவான வாக்குகள் நான்கு வாரங்களுக்கு என்ன வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளின்எண்ணிக்கை வருகிற 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் அப்பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்துஅடுத்துவரும்நாட்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது அவர்களது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

South Indian Artists Association tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe