தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நடிகையான மின்னி ஜோன்ஸ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் எப்படி ஒரு மில்லியன் பணத்தை ஒரு வருடத்திலேயே வீண் செலவுகள் செய்து கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளது உலகம் முழுவதும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

minnie

ஜோஹன்ஸ்பெர்க்கில் வசித்து வரும் மின்னி பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன்பின் டிவி சீரியல் மற்றும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். லெஜிட் என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு மில்லியன் பரிசுத் தொகையை வென்றார். அப்போது அவருக்கு வயது 20 தான்.

Advertisment

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மின்னி, “என்னுடைய 20 வயதில் லிஜிட் என்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதில் எனக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்தது. ஆனால் அடுத்த வருடமே என்னுடைய 21வது வயதில் என்னுடைய ஆடம்பர வீண் செலவுகளால் அனைத்து பணத்தையும் இழந்துவிட்டேன். அப்போது நான் என்ன மாதிரியான செலவுகளை செய்தேன் என்று கூட தற்போது எனக்கு நியாபகம் இல்லை. இது எனக்கு வாழ்க்கையில் பாடத்தை கற்று தந்துள்ளது.

அதன் பிறகு உடல் பராமரிப்பு தொடர்பான தொழிலை தொடங்கினேன், நடித்து கொண்டே தொழிலை கவனித்து வருகிறேன். தற்போது எனது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது” என்றார்.

Advertisment