Sourav Ganguly  biopic Ranbir Kapoor plays a lead role

முன்னாள் இந்திய கிரிக்கெட்அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டே வெளியானது. பின்பு இப்படம் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படவுள்ளதாகவும் கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா அல்லது ரன்பீர் கபூர் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் எனச் சொல்லப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் கங்குலி பயோ பிக் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்கரன்பீர் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ரன்பீர் கபூர் தற்போது தயாராகி வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வெளியானது. அதனைத்தொடர்ந்து தற்போது கங்குலியின் வாழ்க்கை படம் உருவாகவுள்ளது.

Advertisment