திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்க வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

sounth indian Film Technicians Association Case

தமிழக அரசு, தென்னிந்திய திரைப்படத்தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில்சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது “ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுப்பதில்தங்கள் சொந்த நலன் கருதியே முடிவுகளை எடுக்கின்றனர். வழக்கு தொடர்ந்துள்ள நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபடுவதால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்த அரசாணை காலாவதியாகிவிட்டது. இதனால் இரண்டு வாரங்களில் அரசு புதிதாக சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார். மேலும் சங்கத்தின் கணக்குகளை முறைப்படுத்தி, உறுப்பினர் பட்டியலை தயாரித்து தேர்தல் நடத்த வேண்டும் என சிறப்பு அதிகாரிக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Association chennai high court South Indian Film Technology Artists Association Executives
இதையும் படியுங்கள்
Subscribe