பொன்னியின் செல்வன்...படமாக்கும் ரஜினி மகள் !

ponni

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பொன்னியின் செல்வன் நாவலை நீண்ட வருடங்களாக பல்வேறு இயக்குனர்கள், நடிகர்கள் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து வரும் நிலையில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஒரு சரித்திர வெப்சிரீஸாக தயாரித்து கிரியேட்டிவ் ஹெட்டாகவும் பொறுப்பேற்கிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளராக இருந்த சூரியபிரதாப் இத்தொடரை இயக்கவுள்ளார். மேலும் இதுகுறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசின் காலத்தைப் பற்றி விறுவிறுப்பும் வீரமும், தொன்மையும், காதலும், நகைச்சுவையும் கலந்த காவியமாக இது இருக்கும். இந்த நாவலைப் படித்த நாள் முதலே எனக்கு இதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் விரைவில் வெளியாகவுள்ளது.

ponniyin selvan rajinikanth Soundarya Rajinikanth soundarya
இதையும் படியுங்கள்
Subscribe