/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/36_9.jpg)
இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசுக்குப் பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர்.
அந்த வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவரிடம் வழங்கினார். இந்த சந்திப்பின்போது அவரது கணவர் விசாகனும், மாமனார் வணங்காமுடியும் உடனிருந்தனர். இந்த நன்கொடையை தங்களுடைய அபெக்ஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கியுள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)