Advertisment

மீண்டும் டைரக்‌ஷன்; ராகவா லாரன்ஸை இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

soundarya rajinikanth direct raghava lawrence movie

சண்டக்கோழி, சென்னை 600028 உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவா படம் மூலம் தயாரிப்பாளரானார். பின்பு ரஜினியை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கினார். அதன் பிறகு எந்த படங்களிலும் பணியாற்றாமல் இருந்த சௌந்தர்யா, தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து, 'கேங்க்ஸ்' என்ற தலைப்பில் வெப் தொடருக்கு ஷோ ரன்னராக பணியாற்றுகிறார்.

Advertisment

அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நோஹா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதாகவும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

ராகவா லாரன்ஸ் கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், படைத்தலைவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

actor raghava lawrence Soundarya Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe