Advertisment

ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியர்... பொதுவெளியில் அம்பலப்படுத்திய நடிகை! 

Soundarya

சீரியல் நடிகையும் பாடகியுமான சௌந்தர்யா, கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதை பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்.

Advertisment

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சௌந்தர்யா. அதனைத் தொடர்ந்து, தற்போது சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அவருக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் செய்துவந்துள்ளார். அவர், கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுவது தெரியவந்ததும், அவரை நடிகை சௌந்தர்யா பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சௌந்தர்யா, "இதுதான் ஒரு பேராசிரியர் பெண்களிடம் பேசும் முறையா? மிகவும் கேவலமாக உள்ளது. இவர் மதுரையில் பணியாற்றுவதாக அவர் இன்ஸ்டாகிராம் கணக்கு கூறுகிறது. இவரைச் சுற்றியுள்ள கல்லூரி மாணவிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இவர் யார் என்பதை கண்டறிந்து, உரிய முறையில் இவர்மீது புகாரளிப்பேன். இவர் தற்போது என்னை ப்ளாக் செய்துவிட்டார். இருப்பினும், அவர் வேலை பார்க்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கொடுக்க போதுமான விவரங்கள் என்னிடம் உள்ளன. பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு பெண்களிடம் இவ்வாறு பேசியது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் உணர்வதற்கு நான் முயற்சிகள் எடுப்பேன். அவர் நிச்சயம் இதற்கான தண்டனையை அனுபவிப்பார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe