Skip to main content

"அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம்" - நடிகர் சௌந்தரராஜா

Published on 12/08/2020 | Edited on 12/08/2020
hdhs

 

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்த சௌந்தரராஜா, தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வருகிறார். இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கரோனா ஊரடங்களில் அவதிப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்து உதவினார். நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் சௌவுந்தரராஜா, தனது 'மண்ணுக்கும் மக்களுக்கும்' சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவையும் சேர்த்து கொண்டாடினார்.

 

இவ்விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஏரிக்கரைகள், மலை குன்றுகள், பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில் நட்டு அதை பாதுகாக்கவும் வழி வகை செய்திருந்தார். இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றது. சென்னையில் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சௌந்தரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி சேர்மன் தேவ் ஆனந்த், நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி, நடிகர் பிளாக் பாண்டி, மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் உறவுகள், நண்பர்கள், மற்றும் சௌந்தரராஜாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

 

இதன்பின் இதுகுறித்து சௌந்தரராஜா பேசும்போது...."மண்ணுக்கும் மக்களுக்கும்' சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நண்பர்கள், உறவுகள் அனைவரும் தமிழகம் முழுவதும் பருவ மழைக்காலத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிப்பதை ஒரு சவாலாக எடுத்து இருக்கிறோம். முதல் நாளான இன்று மனைவி, குடும்பத்தினருடன் தொடங்கி இருக்கிறேன். எப்போதும் ஒரு இடத்தை தேர்வு செய்து மரக்கன்றுகளை நடுவேன். ஆனால், இந்த முறை நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோர் என்னுடன் சேர்ந்து பயணிப்பதாக கூறினார்கள். 350 பேர் கொண்ட குழு இன்று செயல்பட்டு வருகிறது. மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

 

கரோனா காலத்தில் இயற்கை ரொம்ப முக்கியம் என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை பேரழிவுகள் வந்தால்கூட, இயற்கையின் முக்கியத்துவம் தெரியாமல், பாதுகாக்காமல் விட்டு விடுகிறோம். மரங்கள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து விடுகிறோம். விவசாயம், பசுமையில்தான் ஒரு புரட்சி நடக்க வேண்டும். அதன்மூலமாகதான் நாடு வல்லரசாக வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் பட்டினி என்று ஒருவரும் இருக்க கூடாது என்பதே மிகப்பெரிய வளர்ச்சி வல்லரசு என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் இயற்கையை நேசிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதை எடுத்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் அதை பின்பற்றுங்கள். இந்த மண்ணையும் மக்களையும் காப்போம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நீங்களும் மருத்துவர்கள் அறிவுரையை கேளுங்கள்" - நடிகர் சௌந்தரராஜா வேண்டுகோள்! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

vgddvd

 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்லக் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாகிவருகிறது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். 

 

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் சௌந்தரராஜா கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன், "அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி, என் குடும்ப மருத்துவரின் அறிவுரைப்படி என்னுடைய முதல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டேன். நீங்களும் மருத்துவர்கள் அறிவுரைப்படி விரைவில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். கரோனாவை ஒழிப்போம்.!!" என பதிவிட்டுள்ளார். இவரின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

 

 

Next Story

"இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்" - நடிகர் சௌந்தர ராஜா கவலை!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

bgbdfsbsx

 

பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்றுவந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் சௌந்தர ராஜா மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"பல சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த மாமனிதர் ட்ராஃபிக் ராமசாமி ஐயா அவர்கள் இன்று இயற்கை எய்தினார். சமூக நலனுக்காக போராடுவதில் இவர் ஒரு முன் மாதிரி. இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்து இருக்கிறேன். உங்கள் ஆத்மா இறைவனடி சேரட்டும் ஐயா" என கூறியுள்ளார்.