Advertisment

'அவரை எனக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தெரியும்' - நடிகர் சௌந்தர ராஜன் வாழ்த்து

soundar

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் 'மாயன்' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் திரு.லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ’ கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா அருள்முருகன், பின்னணியிசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி எஃப் எக்ஸ் மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய நடிகர் சௌந்தர்....

Advertisment

"நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை. படக்குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன்.போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக்குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பேத் தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீஸர் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்.” என்றார். நிகழ்ச்சியின் முடிவில் மாயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

Advertisment

actor soundara raja soundararajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe