/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/soumitra chatterjee.jpg)
இந்தியாவிலுள்ள பல மொழி சினிமா துறைகளில் மிகவும் முக்கியமான சினிமா துறை பெங்கால் சினிமா துறை. இத்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற நடிகரான சௌமித்ர சாட்டர்ஜி காலமான செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பதேர் பாஞ்சாலி படத்தின் மூலம் உலக புகழ்பெற்ற இயக்குனர் சத்யஜித் ரே-வின்பல படங்களில் நடித்துள்ள சௌமித்ர சாட்டர்ஜி, இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், தாதா சாகிப் பால்கே உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
கடந்த 60 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சௌமித்ரா சாட்டர்ஜி நடித்துள்ளார். கரோனா வைரஸால் கடந்த மாதம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரின் உடலில், வைரஸால் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் உயிர் பிரிந்தது என்று நேற்று செய்திகள் வெளியானது.
85 வயதாகும் சௌமித்ர சாட்டர்ஜியின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us