Advertisment

பார்வையாளர்களின் நலன் கருதி படம் ஒத்திவைப்பு...

தமிழில் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான படம் சிங்கம், அதே பெயரில் பாலிவுட் இயக்குனர் ரோஹிட் ஷெட்டி பிரபல நடிகர் அஜய் தேவ்கனை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்தார். இந்த படம் பாலிவுட்டில் ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டது.

Advertisment

soorvanshi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதனை தொடர்ந்து சிங்கம் படத்தின் கதையின் தொடர்ச்சியாக ஒரு கதையை உருவாக்கி சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார் ரோஹிட். இதுவும் வெற்றியடைய போலீஸ் கதாப்பாத்திரங்கள் இணைந்த ஒரு ஆக்‌ஷன் பட தொடரை இயக்க ரோகித் ஷெட்டி திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் வெளியானது சிம்பா. இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து எடுத்தார் ரோஹிட் ஷெட்டி. இந்த படத்தின் இறுதியில் அஜய் தேவ்கன், அக்‌ஷய்குமார் ஆகியோர் கெஸ்ட் ரோல் செய்திருப்பார்கள்.

இதன்பின் அக்‌ஷய்குமாரை வைத்து சூர்யவன்ஷி என்ற படத்தை தொடங்கினார் ரோஹிட் ஷெட்டி. இந்த படத்தில் அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூன்று பேரின் கதாபாத்திரங்களும் இணைவதுபோல சித்தரித்திருக்கிறார் ரோஹிட் ஷெட்டி. இதன் மூலம் ரோஹிட் ஷெட்டி காப் யுனிவர்ஸ் என்று அழைக்கப்பட்டது.

சூர்யவன்ஷி படத்தில் கத்ரினா கைஃப், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில்தான் இந்த படத்தின் நான்கு நிமிட ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பெற்றது. வருகிற மார்ச் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று முதலில் அறிவித்திருந்த படக்குழு தற்போது கரோனா வைரஸ் பாதிப்பால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாகப் படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓராண்டுக்கும் மேலான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்ட ‘சூர்யவன்ஷி’ ஒரு அனுபவம். அதன் ட்ரைலருக்குக் கிடைத்த அமோக வரவேற்பின் மூலம் இது உண்மையில் ரசிகர்களுக்கான திரைப்படம் என்பது தெளிவாகிறது.

இப்படத்தை உங்களுக்குத் திரையிட மிகுந்த ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தள்ளிவைக்கத் தீர்மானித்துள்ளோம். சரியான தருணத்தில் 'சூர்யவன்ஷி' உங்களிடம் திரும்பி வரும்.

அனைத்தையும் விடப் பாதுகாப்பே முக்கியம். அதுவரை அதே ஆவலுடன் உடல்நலத்தைக் கவனத்தில் கொண்டு உறுதியாக இருக்க வேண்டுகிறோம். நாம் இதைக் கடந்து செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

ranveer singh akshay kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe