Advertisment

உதவி செய்த ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சூரி!

dhdh

முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது ரசிகர்கள் சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு கரோனாவால் கஷ்டப்படும் தூய்மை பணியாளர்களுக்கும், ஆதரவற்றோருக்கும் சூரி நற்பணி மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தனர். இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"அனைவருக்கும் வணக்கம்,

உங்கள் அன்பு என்னும் வாழ்த்து மழையால் என்னை முழுவதும் நனைய வைத்து என் பிறந்தநாளை சிறந்த நாளாய் மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.

Advertisment

நேற்று என் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் கூறிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைதள நண்பர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

என் நற்பணி மன்றம் சார்பில் பல மாவட்டங்களில் குருதிக்கொடை கொடுத்தும், அன்னதானங்கள் வழங்கியும், இந்த கரோனா காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியும், மரக்கன்றுகளை நட்டும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கிய என் உடன்பிறவா சகோதரர்கள் ஆகிய ரசிகர்கள் உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

சிறப்பாக செயல்பட்ட அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும், ரசிகர்களை வழிநடத்தும் நற்பணி மன்ற தலைவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். நன்றி.

என்றும் அன்புடன்

சூரி" என கூறியுள்ளார்.

actor soori soori
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe