Advertisment

"இவருடன் நடித்தது சிவகார்த்திகேயனோடு நடித்ததுபோல இருந்தது" - நடிகர் சூரி பேச்சு

soori

ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ், மீனாக்‌ஷி கோவிந்தன், சூரி, பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலன்’ திரைப்படம், டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (22.12.2021) நடைபெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="730f636c-74dc-48f5-9602-23264fea806f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/AVV-article-inside-ad_19.jpg" />

Advertisment

விழாவில் நடிகர் சூரி பேசுகையில், "சினிமாவில் இன்று ஜெயிப்பது அத்தனை ஈஸி இல்லை. முபாரக் சார் அடுத்து ‘ஜீவி’ படம் செய்கிறார், ‘வலிமை’ படம் விநியோகம் செய்கிறார். அவர் தொடும் இடம் எல்லாம் வெற்றிபெறுகிறது. அவருக்கு வாழ்த்துகள். கவின், சிறுத்தை சிவா அவர்களின் உதவியாளர்; மிகச்சிறந்த உழைப்பாளி. அவரிடம் இருந்து வந்து, முதல் படம் செய்வது கவின்தான். உங்கள் குருநாதர்போல் நீங்கள் பெரிய வெற்றிபெற வேண்டும். முகேனுடன் நடித்தது சிவகார்த்திகேயனுடன் நடித்ததுபோல இருந்தது. அவருக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. இறைவன் ஆசிர்வாதம் அவருக்கு இருக்கிறது. மீனாக்‌ஷியுடன் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்திருக்கிறேன். மிக அருமையாக நடித்துள்ளார். பிரிகிடாவுக்கு ஷீட்டிங் ஸ்பாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.ராகுல் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டான். கார் கம்பெனிக்குள் போய் ஒரு ப்ராங் பண்ணியிருந்தார், அட்டகாசமாக இருந்தது. மனுஷன் அடி வாங்காமல் தப்பி வந்துவிடுகிறார். பிரபு சார் சீனியர் ஆக்டர், ஆனால் புதுசா வரும் நடிகரிடம் இயல்பாகப் பழகுவதெல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் நன்றாகப் பார்த்துக்கொள்வார். அவருக்குப் பெரிய நன்றி. இந்தப் படம் வெற்றியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனக் கூறினார்.

actor soori
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe