Advertisment

கொட்டுக்காளியாக உச்சகட்ட கோபத்தில் சூரி

soori sivakarthikeyan kottukaali trailer released

Advertisment

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தை கூழாங்கல் பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை பெற்றது. அந்த வகையில் ஜெர்மனி, கனடா, போர்ச்சுக்கல், ஆர்மீனியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று சாதனை படைத்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படம் குறித்து பேசிய சூரி, அவருடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுபட்ட திரைப்படமாக கொட்டுக்காளி இருக்கும் என்றும் உண்மைக்கு மிக நெருக்கமான படமாக இருக்கும் என்றும் கூறினார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரின் ஆரம்பத்தில் சேவலை ஒரு கல்லில் கட்டிப் போட்டுள்ளனர். அதை அன்னா பென் அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது போல் தொடங்குகிறது.

அதன் பிறகு பைக்கில் மூன்று பேருடன் பயணிக்கும் சூரியை போலிஸ் ஒருவர் மறிக்க, எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடித்ததாகக் கூறுகிறார். அதன் பின்பு விறுவிறுவிறுப்பாக சேவல் சண்டைக்கு சில சேவல்களைத் தயார் செய்யும் காட்சிகளுடன் நகர்ந்து, இறுதியில் அன்னா பென்னுக்கு பேய் பிடித்ததை சரி செய்ய காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று, உச்சகட்ட கோபத்தில் சூரி கத்தி அன்னா பென்னை தாக்க முயல்வதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

actor sivakarthikeyan actor soori
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe