கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைதடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி பொது மக்களை மகழ்விக்கவும், அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன் குடும்பத்தோடு இணைந்து தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Actor-Soori-Latest-Stills-3.jpg)
இவர் வெளியிட்டு வரும் இந்த நகைச்சுவை கலந்த கரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோக்கள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கரோனா நிவாரண உதவி தொகை ரூபாய் 1 லட்சம் வழங்கிய அவர், தன்னிடம் உதவி கேட்கும் நலிந்த கலைஞர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார். மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது...''உலகமே கண்டு அஞ்சும் கரோனா வைரஸ் மிக விரைவில் இவ்வுலகிலிருந்து மறைய கடவுளை வேண்டி கொள்கிறேன். அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி இந்த இக்கட்டான சூழ்நிலையை வென்று வரவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)