உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.

soori

Advertisment

இந்நிலையில் நடிகர் பரோட்டா சூரி ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் நடப்பவற்றை தினசரி வீடியோ ஒன்றைபதிவிட்டு வருகிறார். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு எட்டாவது நாளான இன்று, சூரி தனது குழந்தைகளை குளிப்பாட்டிவிடுவது, கழிவறையை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

#corona #lockdown #stayhome #staysafe #stayhealthy

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

Advertisment

மேலும் அந்த வீடியோவில், பிரதமர் மோடி எத்தனை நாள் வீட்டில் தங்கியிருக்க சொன்னாலும் இருக்கிறோம் விரைவில் கரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வெண்டும் என்றும், சீன பிரதமரை தொடர்புக்கொண்டு இவ்வளவிற்கும் காரணமானவரை கண்டுபிடித்து அடிக்க வேண்டும் என்றும் நகைச்சுவையாககுறிப்பிட்டுள்ளார்.