soori next movie announcement

Advertisment

விடுதலை, கருடன் எனக் கதையின் நாயகனாக இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த சூரி, தற்போது கொட்டுக்காளி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கியுள்ள இப்படம் வருகிற 23ஆம் தேதி வெளியாகிறது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தற்போது படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம், மதயானைக் கூட்டம் பட இயக்குநர் விக்ரம் சுகுமாறன் மற்றும் இன்னும் சில இயக்குநர்களின் படங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சூரி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விமலை வைத்து விலங்கு வெப் சீரிஸை எடுத்த பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளார். இப்படத்தை 'கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் தயாரிக்கிறார். மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment