Advertisment

சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ - சூரி பெருமிதம்

soori movie Yezhu kadal yezhu malai world premiere in International Film Festival Rotterdam

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத்தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து டைட்டில் அறிவிப்பு வீடியோ மட்டும்தான் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்த வீடியோ வெளியான நிலையில் சமீபத்தில் படக்குழுவினர் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக அப்டேட் வெளியானது.

Advertisment

இந்த நிலையில், இப்படம் ரோட்டர்டாம் சர்வதேசத்திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ளது.இதில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது. இதை படக்குழு பெருமையாக கருதுகிறது. நிவின் பாலியும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலைப் பகிர்ந்து பெருமைப்பட்டுள்ளார். அந்த வகையில், சூரியும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பெருமைகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

சூரி ஹீரோவாக நடித்த விடுதலை படம் சமீபத்தில் நடந்து முடிந்த கோவா சர்வதேசத்திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்லவரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ரோட்டர்டாம் சர்வதேசத்திரைப்பட விழாவில் திரையிடத்தேர்வாகியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

actor soori director ram Yezhu Kadal Yezhu Malai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe