சூரி கதையின் நாயகனாக புதிதாக நடித்துள்ள ‘மாமன்’ படம் கடந்த மாதம் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சூரி நடித்தது மட்டுமல்லாமல் கூடுதலாக கதையும் எழுதியுள்ளார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கியிருக்க 'கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். 

Advertisment

சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நடித்திருக்க முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் என்பவர் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியிருந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. டிஜிட்டலில் ஜீ5 ஓ.டி.டி. தளத்திலும் சாட்டிலைட்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவுள்ளது. படத்தின் பிரீமியர் தேதி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.