/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/106_36.jpg)
கதையின் நாயகனாக தொடர்ந்து பயணித்து வரும் சூரி தற்போது மாமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கி வருகிறார். இப்படத்தை 'கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. கதாநாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்க ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில் உருவாகிறது. பின்பு சூரி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று இரண்டு புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தாமதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு போஸ்டரில் சூரி மட்டும் ஹைலைட்டக தெரிகிறார். ஆக்ஷன் மோடில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. மற்றொரு போஸ்டரில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, பால சரவணன் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். முறை மாமன் மடியில் காது குத்தும் நிகழ்வில் குடும்பத்தினர் அனைவரும் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது. இப்படம் வருகிற கோடையில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)