வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக சூரி? 

வடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசுரன். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

soori

இதற்கு முக்கிய காரணம் இதற்கு முன் இதே கூட்டணி கொடுத்த படங்கள்தான். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களின் வெற்றி தான்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும், படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாள் அன்று வரும் என கூறப்படுகின்றது.

இந்த படம் முடிந்தவுடன் வெற்றிமாறன் ‘வடசென்னை 2’ படத்திற்கான முன் வேலைகளில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரோட்டா சூரியை ஹீரோவாக வைத்து வேறொரு படத்தை இயக்க இருக்கிறாராம். இச்செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

actor soori vetrimaran
இதையும் படியுங்கள்
Subscribe